கன்னித்தீவு போல இழுக்கும் வலிமை… மீண்டும் சிக்கலில் சிக்கிய படக்குழு!

புதன், 21 ஏப்ரல் 2021 (12:35 IST)
வலிமை படத்தின் படப்பிடிப்பை ஐரோப்பாவில் நடத்த திட்டமிட்டு இருந்தார் இயக்குனர் ஹெச் வினோத்.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஆனால் படம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் படத்தின் டைட்டில் போஸ்டர் கூட இன்னும் படத்தயாரிப்பாளரால் வெளியிடப்படவில்லை. இந்த படத்தில் கதாநாயகியாக ஹூமா குரேஷியும் வில்லனாக நடிகர் கார்த்திகேயாவும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் மே மாதத்தில் இருந்து தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இதன் க்ளைமேக்ஸ் காட்சிகளை ஐரோப்பாவில் படமாக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்தார் இயக்குனர் வினோத். அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன. இந்நிலையில் இப்போது இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் பல நாடுகளும் இந்தியாவில் இருந்து வருபவர்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால் திட்டமிட்டப்படி வலிமை படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடப்பது தள்ளிப்போகலாம் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்