வலிமை வெளிநாட்டு ஷூட்டிங்… நுங்கெடுக்கும் ஹெச் வினோத்!

சனி, 31 ஜூலை 2021 (10:17 IST)
வலிமை படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்க உள்ளது.

நடிகர் அஜித் குமார் நடிப்பில் இப்போது வலிமை திரைப்படம் கிட்டத்தட்ட முடிந்து ரிலிஸூக்கு தயாராகியுள்ளது. இன்னும் கடைசிக் கட்ட படப்பிடிப்பு மட்டுமே நடத்த வேண்டியுள்ளது. அதற்காக இப்போது ரஷ்யாவுக்கு சென்று படப்பிடிப்பை நடத்த உள்ளது ஹெச் வினோத் தலைமையிலான படக்குழு.

ரஷ்யாவில் எடுக்க வேண்டிய காட்சிகளை மிகவும் குறுகிய நாட்களிலேயே எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாம் படக்குழு. இதனால் அங்கு வழக்கமாக நடக்கும் படப்பிடிப்பு நேரத்தை விட் அதிக நேரம் படப்பிடிப்பு நடத்தினால்தான் படம் முடியும் என்பதால் இடைவேளையே இல்லாமல் படக்குழுவினரை வேலை வாங்கப் போகிறாராம் ஹெச் வினோத். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்