ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த அஜித்தின் அம்மா பாடல்!

திங்கள், 6 டிசம்பர் 2021 (13:24 IST)
அஜித் நடித்த 'வலிமை’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் நேற்று வெளியானது என்பதும் அம்மா சென்டிமென்ட் கொண்ட இந்த பாடல் மிகப் பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த பாடலின் லிரிக் வீடியோ நேற்று இணையதளத்தில் வெளியாகியது. விக்னேஷ் சிவன் எழுதிய இந்த அம்மா சென்டிமென்ட் பாடலின் ஒவ்வொரு வரியை படிக்கும்போது நமது அம்மாவையே ஞாபகப்படுத்தும் அளவுக்கு இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து இந்த பாடலை விரும்பி கேட்டு வருகின்றனர். 
 
இந்த நிலையில் இந்த பாடல் 2.5 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. இந்த பாடலுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. இந்த பாடலின் வீடியோ காட்சியை பார்க்க ஆவலோடு இருப்பதாக அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்