“வாங்க இங்கிட்டு போதும்…”- விஜய் அரசியல் குறித்து வடிவேலு அளித்த பதில் இதுதான்!

vinoth

புதன், 7 பிப்ரவரி 2024 (08:03 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளது.

இது சம்மந்தமான அறிவிப்பில் தான் ஏற்கனவே ஒத்துக்கொண்ட இன்னும் ஒரு படத்தை மட்டும் நடித்து முடித்துவிட்டு அதன் பின்னர் முழுமையாக மக்கள் சேவைக்கு வரவுள்ளதாகக் கூறியிருந்தார். இப்போது The GOAT திரைப்படத்தில் நடித்து வரும் விஜய், இதன் பின்னர் தனது 69 ஆவது படத்தில் நடிப்பார் என தெரிகிறது.

விஜய்யின் அரசியல் வருகைக்கு அரசியல் பிரபலங்களும், சில சினிமா கலைஞர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் கோயிலுக்கு சென்று வழிபட்ட நடிகர் வடிவேலுவிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வடிவேலு ஜாலியாக “போதும் போதும் வாங்க இங்கிட்டு” என எந்த பதிலும் சொல்லாமல் மழுப்பாமல் சென்றுவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்