சிறையில் இருக்கும் சரத்குமாருக்கு காதல் கடிதம் அனுப்பிய ராதிகா - வீடியோ!

புதன், 5 பிப்ரவரி 2020 (07:32 IST)
குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மணிரத்னத்தின் சிஷ்யன் தனா இயக்கும் 'வானம் கொட்டட்டும்' படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், சாந்தனு, அமித்ஷா பிரதான், பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
 
மணிரத்னம் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. வயதான கெட்டப்பில் அப்பா , அம்மாவாக சரத்குமார் மற்றும் ராதிகா நடிக்க அவர்களது மகனாக விக்ரம் பிரபு நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து வருகிற 2020 ஜனவரியில் இப்படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் தான் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது. 
 
இந்நிலையில் தற்போது  இப்படத்தின் புதிய ஸ்னீக் பீக் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. பல வருடங்களுக்கு முன்னர் சிறைக்கு சென்ற சரத்குமார் தன் பிள்ளைகள் பெரியவர்களாக வளரும் வரை சிறையிலேயே வாழ்க்கையை கழிக்கிறார். அவர் தனது மனைவி ராதிகா அனுப்பிய கடிதத்தை வாசித்து குழந்தைகளின் நிலைமைகளை தெரிந்துகொள்கிறார். சிறையில் இருந்து வெளியில் வந்து தன் பிள்ளைகளுக்கு எதையாவது செய்யவேண்டும் என்ற முனைப்புடன் அவர் இருப்பதை அறிய முடிகிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்