குருவி படம் பிளாப்பா? கொந்தளிக்கும் உதயநிதி ஸ்டாலின்!!

புதன், 10 மே 2017 (13:12 IST)
தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, விவேக், சுமன் உள்ளிட்டோர் நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த படம் குருவி. 


 
 
இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்தது. ஆனால் குருவி படம் சரியாக ஓடவில்லை. 
 
இந்நிலையில், குருவி படம் பிளாப் என்று யார் சொன்னது என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பெரிய ஹிட்டாகும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் ஆகவில்லை. அவ்வளவு தான். மற்றபடி எனக்கு நல்ல லாபம் கிடைத்தது என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
 
உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு தனக்கு குருவியால் லாபம் என்று கூறியிருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது. இதை தொடர்ந்து அஜீத்தை வைத்து ஒரு படத்தை தயாரிக்க காத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். 

வெப்துனியாவைப் படிக்கவும்