மீண்டு வந்து சிரிக்க-சிந்திக்க வைக்கட்டும்: விவேக்கிற்கு உதயநிதி வாழ்த்து!

வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (16:33 IST)
மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் விவேக் விரைவில் மீண்டு தமிழக மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கட்டும் என்று உதயநிதி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் 
 
நடிகர் விவேக் இன்று காலை திடீரென மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
இந்த நிலையில் நடிகர் விவேக் விரைவில் குணமாக வேண்டும் என துணை முதல்வர் ஓபிஎஸ், கவிஞர் வைரமுத்து உள்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டரில் விவேக் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
 
உடல்நலம் குன்றி சிகிச்சையில் இருக்கும் சின்னக்கலைவாணர் அண்ணன் விவேக் அவர்கள் நலம்பெற்று விரைவில் வீடு திரும்ப விரும்புகிறேன். அன்போடு பழகுவதிலும்-சமூக சிந்தனையுடன் செயல்படுவதிலும் அண்ணனுக்கு நிகர் அவரே. அண்ணன் அவர்கள் மீண்டு வந்து தமிழக மக்களை சிரிக்க-சிந்திக்க வைக்கட்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்