HBD யுவன்ஷங்கர் ராஜா: ரசிகர்கள் வாழ்த்து!

செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (06:14 IST)
பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
யுவன் சங்கர் ராஜா கடந்த 1996ஆம் ஆண்டு 16 வயது இருக்கும்போது இசைத்துறைக்கு அறிமுகமானார். அவர் இசையமைத்த முதல் திரைப்படம் சரத்குமார் நடித்த அரவிந்தன். அதன் பிறகு அவர் பல திரைப்படங்களில் இசையமைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
இவருடைய இசையமைப்பில் இளையராஜாவின் சாயல் இல்லாமல் புதுவிதமாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தமிழ் திரையுலகில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இசை அமைப்பது மட்டுமின்றி பாடலாசிரியராகவும் பாடகராகவும் பல திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் யுவன் சங்கர் ராஜாவுக்கு வெப்துனியா சார்பில் நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்