HBD ஆனந்த்பாபு!

திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (06:38 IST)
HBD ஆனந்த்பாபு!
பிரபல நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த்பாபு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் திரையுலகினர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
 நடிகர் ஆனந்த் பாபு, டி ராஜேந்தர் இயக்கி நடித்த தங்கைக்கோர் கீதம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பின்னர் அவர் பாடும் வானம்பாடி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார் என்றும் பின்னர் தொடர்ச்சியாக பல வெற்றி படங்களை கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் இடையில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் அவர் மீண்டும் ரீ-என்ட்ரி ஆனார் என்பதும் சூர்யா நடித்த ஆதவன் உள்பட பல படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் திரைப்படங்கள் மட்டும் என்றே தொலைக்காட்சிகளிலும் தொடர்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் ஆனந்த்பாபு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்