பாவனா முரண்டு பிடித்ததால் பாலியல் தொல்லை கொடுத்தோம்: குற்றவாளி தகவல்

வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (20:51 IST)
பணம் பறிக்க திட்டமிட்டுதான் பாவனாவை கடத்தினோம். ஆனால் அவர் முரண்டு பிடித்ததால் பாலியல் தொல்லை கொடுத்தோம் என இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள பல்சர் சுனில் கூறியுள்ளார்.  


 

 
பிரபல நடிகை பாவனா கடந்த 17-ந்தேதி காரில் கடத்தப்பட்டார். படப்பிடிப்பு முடிந்து திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் சென்றபோது இச்சம்பவம் நடந்தது. அவரை காரில் கடத்திய கும்பல் இரண்டரை மணி நேரம் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாவனா காவல்துறையில் புகார் அளித்தார். 
 
அதைத்தொடர்ந்து பாவனா தனக்கு நடந்தவற்றை பெண் நீதிபதியிடம் வாக்குமூலமாக பதிவு செய்தார். கொச்சி காவல்துறையினர் இதுகுறித்து அனைவரும் மீதும் சந்தேகப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். பிரபல மலையாள நடிகர்கள் மீது சந்தேகப்பட்டு விசாரணை செய்தனர். ஆனால் அவர்கள் எங்களுக்கு இதில் சம்மதம் இல்லை என மறுத்துவிட்டனர்.
 
இதனிடையே பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்பேரில் கோவையிலிருந்து 2 பேரும், பாலக்காட்டிலிருந்து மணிகண்டன் என்பவரும் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளி இரண்டு தலைமறைவாக இருந்தனர். நீதிமன்றத்தில் சரணடைய வந்த பல்சர் சுனில் மற்றும் விஜேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
 
முக்கிய  குற்றவாளியாக கைது செய்யப்பட்ட சுனில் மற்றும் விஜேஷ் காவல்துறையினரிடம், பாவனாவிடம் பணம் பறிக்கவே அவரை கடத்தினோம், அவர் முரண்டு பிடித்ததால் பாலியல் தொல்லை கொடுத்தோம் என கூறியுள்ளனர்.
 
ஆனால் காவல்துறையினர் அதை நம்பவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்