Box Office வின்னர் யார் ? 7 நாட்களாக தொடரும் கடும் போட்டி - டாப் இடத்தில் விஜய்யா, அஜித்தா?

செவ்வாய், 17 ஜனவரி 2023 (09:42 IST)
தமிழ்நாட்டின் இரு பெரும் ஜாம்பவான்களான அஜித், விஜய் நடிப்பில் வாரிசு, துணிவு என போட்டிபோட்டுக்கொண்டு இந்த பொங்கலுக்கு களமிறங்கியது. இதனை இருவரது ரசிகர்களும் திருவிழா போன்று கொண்டாடி தீர்த்தனர். 
 
அதிலும் அதிக வசூல் ஈட்டி யார் வெற்றி பெற்றது என்பதில் பெரும் போட்டி நிலவி வருகிறது. இந்த  படங்கள் வெளியாகி 7 நாட்கள் ஆன நிலையில் எந்த படம் வசூல் வேட்டையில் முதலிடம் பிடித்திருக்கிறது என ரோகினி திரையரங்கம் முதற்கொண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 
 
அதன் படி 7 நாள் முடிவாக தமிழகத்தில் வாரிசு ரூ. 73 கோடியாகவும், அஜித்தின் துணிவு ரூ. 75 கோடி என வசூல் செய்து அஜித் Box Office வின்னர் ஆகியுள்ளார். இதற்கு முக்கிய காரணம் 
துணிவு படத்திற்கு அதிகமாகவும் வாரிசு படத்திற்கு குறைவாகவும் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதுதான் என விஜய் ரசிகர்கள் குறைகூறியுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்