நயன்தாரா நடிப்பில் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வந்த 'மூக்குத்தி அம்மன் படம் முடிந்து ரிலிஸுக்கு தயாராக இருந்த போது கொரோனா ஊரடங்கினாள் தள்ளி சென்றது. இதனால் தீபாவளி தினத்தை முன்னிட்டு "மூக்குத்தி அம்மன்" படம் விஜய் டிவி மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது. இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஊர்வசியின் நடிப்புக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.
இந்நிலையில் ஆங்கில் இந்து ஊரடகத்துக்கு அவர் அளித்த நேர்காணலில் படக்குழுவினருடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் இயக்குனர் ஆர் ஜே பாலாஜியிடம் வசனங்கள் கொண்ட ஸ்கிரிப்ட் இருக்காது. குறிப்பிட்ட காட்சியைப் பற்றிய சுருக்கத்தை எங்களிடம் கொடுத்து எங்கள் விருப்பப்படி பேசச் சொல்லுவார். அவரது இந்த ஸ்டைல் வினோதமாக இருந்தது. ஆனால் எல்லா நடிகர்களுக்கும் இந்த பாணி பொருந்தாது. சில நடிகர்கள் கண்டிப்பாக அனைத்து வசனங்களை எழுதித் தர சொல்லி கேட்பார்கள். அதுமட்டுமில்லாமல் நடித்து முடித்தவுடன் இயக்குனரின் கமெண்ட்ஸையும் எதிர்பார்ப்பார்கள். எனக் கூறியுள்ளார்.