விஜய் பட இயக்குநரின் அடுத்த ஹீரோ இவர்தான் !

செவ்வாய், 1 ஜூன் 2021 (18:17 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.இவர் இளம் நடிகரை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர், அஜித் நடிப்பில் தீனா, சூர்யா நடித்த கஜினி, ஏழாம் அறிவு, விஜய்யின் கத்தி, சர்க்கார், துப்பாக்கி உள்ளிட்ட படங்களை இயக்கி கமர்சியல் இயக்குனராக வெற்றி பெற்றார்.

விஜய்65 பட பேச்சுவார்த்தையின்போது, இவரது திரைக்கதையில் திருப்தி இல்லாததால் விஜய் ஏ..ஆர்.முருகதாஸை நிராகரித்துவிட்டு, நெல்சன் திலீப்குமார் நடிப்பில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல இளம் தெலுங்கு நடிகர் ராம் பொதினேனியை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் விரைவில் ஒரு படம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 

Welcome onboard #RAPO19 my Rockstar @ThisIsDSP !

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்