அப்படிலாம் ரசிகர்கள பிடிச்சுட முடியாது ராஜா.. சிவகார்த்திகேயன் பதில்!

vinoth

வியாழன், 4 செப்டம்பர் 2025 (08:40 IST)
அமரன் படத்தின் இமாலய வெற்றியை அடுத்து சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி வசந்த், வித்யுத் ஜமால் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதற்காகப் படத்தை ப்ரமோட் செய்யும் பணிகளில் முருகதாஸ் ஈடுபட்டு வருகிறார்.

ஆனாலும் மதராஸி படத்துக்குத் தொடக்கம் முதலே ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இல்லை. இதற்கு முக்கியக் காரணம் முருகதாஸின் சமீபத்தையப் படங்கள் அடைந்த படுதோல்வி. அதே  போல படத்தின் போஸ்டர்களில் இருந்து பாடல்கள் வரை (சலம்பல பாடல் தவிர) எதுவுமே ரசிகர்களை ஈர்க்கும் விதமாக இல்லை. இதன் காரணமாக தற்போது முன்பதிவு தொடங்கிவிட்டாலும், பெரிய அளவில் புக்கிங் இல்லை என்று சொல்லப்படுகிறது. படம் ரிலீஸாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெறத் தொடங்கும்போது இந்த நிலை மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் விஜய் ரசிகர்களைக் கவர பார்க்கிறேனா என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ளார். அதில் “அப்படியெல்லாம் ரசிகர்களை பிடிச்சுட முடியாது. விஜய் சார், அஜித் சார், விக்ரம் சார், சிம்பு சார் என எல்லோருக்கும் தனித்தனியான ரசிகர்கள் உள்ளார்கள்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்