கன்னடத்து பைங்கிளியான ராஷ்மிகா இன்று கார்த்தி 19 படத்தின் துவக்க விழாவில் பங்கேற்றார். அந்த படங்களை டுவிட்டரில் பதிவிட்டிருந்த அவர், எனக்கு எப்போதும் மிகப்பெரிய ஆதரவினை கன்னட மற்றும் தெலுங்கு ரசிகர்கள் அளித்து வருகிறார்கள். என்னை தமிழக்கு வருமாறு நீங்கள்(தமிழ் ரசிகர்கள்) அழைத்தீர்கள், அதனால் 2019ம் ஆண்டில் தமிழுக்கு வந்துவிட்டேன். கார்த்தி 19 படக்குழுவுடன் இணைந்து படம் பண்ணுவது மிகச்சிறந்த மகிழ்ச்சி. இதுவொரு புதிய துவக்கம். என்னை நேசிக்கும் அனைவருக்கும் அன்பு கலந்த நன்றி என குறிப்பிட்டுள்ளார்.