நிச்சயதார்த்தம் முடிந்த பின் திருமணத்தை நிறுத்திய பிரபல நடிகை..

செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (13:11 IST)
'கீதா கோவிந்தம்' பட நாயகி நிச்சயதார்த்தம் முடிந்த பின் திருமணத்தை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 
கிரிக் பார்டி படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமானவர் ராஷ்மி மந்தனா.  அஞ்சனா புத்ரா, சமக் போன்ற கன்னட படங்களில் நடித்தார். 
 
இவரது நடிப்பில் தெலுங்கில் கீதா கோவிந்தன்  படம் வெளியானது. இந்த மூலம் ரசிகர்கள் பட்டாளத்தையே தன் பக்கம் இழுத்துக் கொண்டார் மந்தனா. இதில் வரும் இன்கேம் இன்கேம் பாடல் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது.

 
மந்தனாவும் கன்னட நடிகர் ரக்ஷித்தும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். கடந்த ஜூலை மாதம் பெங்களூரில் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் விரைவில் திருமணம் தான் என பலர் எதிர்பார்த்து வந்தனர். 
 
இவர்களுக்கு இடையில் என்ன ஆனது என தெரியவில்லை.இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனராம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்