ஒரு ஆண்டு நிறைவு… சந்தித்து வெற்றியைக் கொண்டாடிய திருச்சிற்றம்பலம் படக்குழு!

சனி, 19 ஆகஸ்ட் 2023 (07:00 IST)
நடிகர் தனுஷ் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் யாரடி நீ மோகினி, குட்டி மற்றும் உத்தமபுத்திரன் ஆகிய 3 படங்களில நடித்து சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு ரிலீஸான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.

பெரிய எதிர்பார்ப்பில்லாமல் ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட்படமாக அமைந்து 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. படத்தில் தனுஷ், நித்யா மேனன் மற்றும் பாரதிராஜா ஆகியோரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் இப்போது இந்தபடம் வெளியாகி ஒரு ஆண்டு நிறைவுபெற்றுள்ளதை படக்குழுவினர் சந்தித்து அந்த வெற்றியைக் கொண்டாடியுள்ளனர். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்