காதலை அறிவித்து புகைப்படம் வெளியிட்ட தெருக்குரல் அறிவு!

ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (14:37 IST)
தமிழ் சினிமாவில் சில படங்களுக்கு பாடல் எழுதியதன் மூலம் பிரபலம் ஆனார் தெருக்குரல் அறிவு.

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை மற்றும் தயாரிப்பில் கடந்த ஆண்டு எஞ்சாய் எஞ்சாமி பாடல் யு டியூபில் வெளியானது.  இந்த பாடலுக்கான வரிகளை தெருக்குரல் அறிவு எழுத தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் இணைந்து பாடி இருந்தனர். ஏ ஆர் ரஹ்மானின் மாஜா ஸ்டுடியோவின் இணையப்பக்கத்தில் இந்த பாடல் வெளியானது. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த பாடல் திரையுலகினர் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுகளை பெற்றது.

மேலும் இயக்குனர் பா ரஞ்சித் உருவாக்கிய “காஸ்ட்லெஸ் கலெக்டிவ்” என்ற அமைப்பிலும் அவர் பல பாடல்களை எழுதி பாடியுள்ளார். இந்நிலையில் சக இசைக் கலைஞரான கல்பனாவை காதலிப்பதாக அறிவு இப்போது சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்