’தேன்மொழி’ சீரியல் நடிகர் வெட்டி கொலை: பரபரப்பு தகவல்!

ஞாயிறு, 15 நவம்பர் 2020 (16:52 IST)
’தேன்மொழி’ சீரியல் நடிகர் வெட்டி கொலை: பரபரப்பு தகவல்!
ஜாக்லின் நடித்துவரும் தேன்மொழி என்ற சீரியலில் நடித்து வந்த நடிகர் ஒருவர் சென்னையில் இன்று பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கலக்க போவது யாரு’ புகழ் ஜாக்லின் நடித்துவரும் தேன்மொழி என்ற தொலைக்காட்சி தொடரில் செல்வரத்தினம் என்பவர் துணை நடிகராக நடித்து வந்தார். இவர் இன்று அதிகாலையில் சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள தனது வீட்டின் முன்னால் நின்று கொண்டிருந்தபோது திடீரென ஆட்டோவில் 4 பேர் வந்ததாகவும் அவர்கள் செல்வரத்தினத்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அதே ஆட்டோவில் மாயமாய் மறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது 
 
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பட்டப்பகலில் தொலைக்காட்சி நடிகர் ஒருவர் சென்னையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொலைக்காட்சியில் நடிகர் நடிகைகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்