கொரிய படத்தை சுட்டு தேள் படம் எடுத்த இயக்குனர்… தயாரிப்பாளருக்கு நஷ்டம்!

வெள்ளி, 28 ஜனவரி 2022 (16:11 IST)
பிரபுதேவா நடிப்பில் ஹரிகுமார் இயக்கிய தேள் திரைப்படம் பியதா என்ற கொரிய படத்தின் காப்பி என்பது தெரியவந்துள்ளது.

பிரபுதேவா நடித்த ‘தேள்’ என்ற திரைப்படம் டிசம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பொங்கலுக்கு ரிலீஸாக் இருந்த வலிமை, ஆர் ஆர் ஆர் மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய மிகப்பெரிய படங்கள் கொரோனா கட்டுபாடுகள் காரணமாக பின் வாங்கின.

இதனால் இப்போது பல சிறிய படங்கள் தங்கள் ரிலீஸை பொங்கலுக்கு கொண்டு வருகின்றன. ஏற்கனவே விஷாலின் வீரமே வாகை சூடும் படம் உள்ளிட்ட சில படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இப்போது தேள் திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

ஆனால் படம் ரிலீஸான பின்னர் மோசமான விமர்சனங்களைப் பெற்று வசூலில் சோபிக்கவில்லை. இந்நிலையில் இப்போது படம் பியதா என்ற கொரிய படத்தின் காட்சிகளை கண்டபடி சுட்டு எடுக்கப்பட்ட படம் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இப்போது படத்தின் தயாரிப்பாளர் ஒரு கோடிக்கும் அதிகமாக நஷ்ட ஈடு கொடுத்து பிரச்சனையை சுமூகமாக முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்