இது வித்தியாசமான சன் பாத்தா இருக்கே… மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் க்ளிக்!

வெள்ளி, 28 ஜனவரி 2022 (15:57 IST)
நடிகை மாளவிகா மோகனன் மாலத் தீவுகளுக்கு சென்று அங்கிருந்து கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

மாஸ்டர் படத்தில் கமிட்டானதில் இருந்து மாளவிகா மோகனன் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. அதற்கு முன்னர் அவர் தமிழில் பேட்ட படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தார். இந்நிலையில் மாஸ்டர் வெளியான போது அவருக்கான காட்சிகளே படத்தில் இல்லாமல் போனது பெருத்த ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில் இப்போது தனுஷின் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

ஆனாலும் அவரை மிகவும் கவனிக்க வைப்பது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கமே. அதில் தொடர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது. மாலத்தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மாளவிகா மோகனன் அங்கிருந்து பிகினி புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளசுகளை இழுத்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்