இவர் இயக்குனர் சரணின் உதவியாளர். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வெளிவந்த இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்திருந்தார். 'விக்ரம் வேதா' படப் புகழ் சாம்.சி.எஸ். இசை அமைக்க சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்பை ரூபன் கவனிக்க ஆர்ட் டைரக்டராக லால்குடி இளையராஜா பணியாற்றினார்.
இந்த நிலையில், தற்போது இப்படத்தில் இடம் பெற்றுள்ள நீக்கப்பட்ட காட்சியின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில், காசு வாங்கிக் கொண்டு வேலை பார்க்கும் காவல் துறை, கடமைக்காக வேலை பார்க்கும் காவல் துறை என்று நடிகர் ஜெயம் ரவி குற்றங்களை கண்டுபிடிக்க புதிதாக பணியில் சேர்ந்திருக்கும் உண்மையான போலீஸ் அதிகாரியாக கூறியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.