தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி கூறிய சூப்பர் ஸ்டார்

புதன், 13 டிசம்பர் 2023 (15:48 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்  நடிப்பில் ஜெயிலர் படத்திற்குப் பின் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார்.

அதேசமயம்  ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில், லால் சலாம் படத்திலும் நடித்துள்ள நிலையில், நேற்று இவரது 73 வது பிறந்த நாளை முன்னிட்டி லால் சலாம் பட ரஜினியின் ஜிலிம்ப்ஸ் வீடியோ வெளியானது.

நேற்று அவருக்கு சினிமாத்துறையினர், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்துகள் கூறினர்.

இதற்கு இன்று சூப்பர்ஸ்டார் ரஜினி நன்றி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த மதிப்பிற்குரிய திரு.எடப்பாடி பழனிச்சாமி,
திரு.O.பன்னீர் செல்வம், திரு.அண்ணாமலை, திரு.சந்திரபாபு நாயுடு மற்றும் என்னை வாழ்த்திய என்னுடைய அனைத்து மத்திய, மாநில அரசியல் நண்பர்களுக்கும்., நண்பர் திரு.கமலஹாசன், திரு.இளையராஜா, திரு.வைரமுத்து, திரு.S.P.முத்துராமன், திரு.ஷாருக்கான் மற்றும் கலையுலகத்தை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும்.., திரு.சச்சின் டெண்டுல்கர், திரு.சுரேஷ் ரெய்னா, திரு.ஹர்பஜன் சிங் மற்றும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும்.., அனைத்து துறை சார்ந்த என்னுடைய நலவிரும்பிகளுக்கும்,
நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும்.., என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும், உலகெங்கும் இருக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்...

உழைப்பு:- "பொழுதைப் போக்கும்! வறுமையை நீக்கும்!! உடலினை காக்கும்" "உழைத்திடுவோம் மகிழ்ந்திடுவோம்"என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்