கோடநாடு எஸ்டேட் கொள்ளை முயற்சி சம்பவத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக, தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூஸ் நேற்று குற்றம்சாட்டி இருந்தார்.
ஜெயலலிதா கட்சி நிர்வாகிகள் குறித்து எந்த ஆவணங்களையும் வாங்கியதில்லை. ஆனால் கோடநாட்டில் வைத்திருந்நதாக செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் துளியும் உண்மையில்லை. ஜெயலலிதா மீது களங்கம் கற்பிக்கும் வகையில் அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த செய்தியை வெளியிட்டவர்கள் யார், அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் யார் என்பது கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறுக்கு வழியை கையாண்டு அதிமுக ஆட்சியை கவிழ்க்க முடியாது. என்றார்.