நேரம் ஆக ஆக பதற்றமடைந்த அவர், உடனடியாக முதலமைச்சர் நாராயணசாமிக்கு போன் செய்துவிட்டார். போனை எடுத்த முதல்வரிடம் நடந்தவற்றை கூறினார் ராஜா. யாரும் பயப்படாதீர்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளை அனுப்புகிறேன் என நாராயணசாமி கூறினார்.
சற்று நேரத்தில் ராஜா வீட்டிற்கு இரு வனத்துறை அதிகாரிகள் பறந்தனர். அங்கிருந்த பதுங்கி இருந்த பாம்பை பிடித்தனர். சற்று நேரம் கழித்து முதலமைச்சர் எண்ணில் இருந்து ராஜா எண்ணிற்கு போன் வந்தது. பாம்பை அப்புறப்படுத்திவிட்டார்களா என ராஜாவிடம் முதல்வர் கேட்டறிந்தார். முதல்வரின் இந்த செயலை பலர் பாராட்டி வருகின்றனர்.