ஜப்பானில் திரையரங்குகளில் வெளியாகும் மலையாள வெற்றிப்படம்!

புதன், 12 ஜனவரி 2022 (10:45 IST)
மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் ஜப்பானில் வெளியாக உள்ளது.

இயக்குநர் ஜோ பேபி இயக்கிய த கிரெட் இந்தியன் கிச்சன் திரைப்படம் Neestream தளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்றது. சூரஜ் வெஞ்சரமுடு, நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்திருந்த இந்த திரைப்படம் மொழி தாண்டியும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இப்போது இந்த திரைப்படம் தமிழில் அதில் பெயரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஆர் கண்ணன் ரீமேக் செய்துள்ளார்.

பல்வேறு பாராட்டுகளையும், விருதுகளையும் குவித்த இந்த படம் இப்போது ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டு ஜனவரி 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஜப்பான போன்ற நாடுகளில் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்