பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' திரைப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது. அதேபோல் அமீர்கானின் 'பிகே திரைப்படம் ரூ.740 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் 100 வருட இந்திய சினிமா உலகில் முதன்முதலாக ஒரு திரைப்படம் ரூ.1000 கோடி வசூலை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படம் தான் 'பாகுபலி 2
'பாகுபலி 2' படத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ராணா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். 'பாகுபலி'யை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற மர்மத்தை தெரிந்து கொள்ள இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால் இந்த படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே உள்ளது.