விஜய்சேதுபதி படம் ரூ.100 கோடி வசூல் சாதனை!!!

ஞாயிறு, 7 மார்ச் 2021 (11:38 IST)
சமீபத்தில் தெலுங்கில் ரிலீசான படம் உப்பன்னா.  இப்படம் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

தெலுங்கில் ரிலீசான படம் உப்பன்னா. இப்படத்தி விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தை சுகுமார் இயக்கி இருந்தார். இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில், இப்படம் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, இப்படத்தை சினிமா பிரபலங்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்நிலையில் உப்பன்னா படம் சுமார் ரூ.100 கோடி  வசூல் செய்துள்ளது. இதைப் படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்தில், இப்படம் குறித்து நடிகர் அல்லு அர்ஜூன் பாராட்டினார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததாவது: உப்பன்னா படம் நன்றாக உள்ளது.

என் மரியாதையை இயக்குநர் புச்சி பாபு சனாவுக்கு தெரிவிக்கிறேன். ஆத்மார்த்தமான இசையை தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு கொடுத்திருக்கிறார். இப்படத்தை அடுத்த லெவலுக்குக் கொண்டு சென்றதற்கு மிகப்பெரிய மரியாதை விஜய் சேதுபதிக்கு ….எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்