சமந்தா நடிப்பில் உருவாகியுள தி ஃபேமிலிமேன்- 2 பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் நேற்று அமேசான் பிரைமில் ரிலீஸானது. இதில் மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஈழத்தமிழர்கள் தமிழக தமிழர்களின் உணர்வுகளை இந்த தொடர் பெருமளவு புண்படுத்தி உள்ளது என்று தமிழக அரசு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரருக்கு கடிதம் எழுதியது. ஈழத் தமிழர்களைத் தவறாக சித்தரித்துள்ளதாக பெரும் எதிர்ப்புகள் உருவான நிலையில் இந்த தொடர் வெளியாகிய பிறகு நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் சமந்தாவின் படுக்கையறை காட்சி புகைப்படம் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.