’Squid game ’ வெப் தொடரை பரப்பியவருக்கு மரண தண்டனை!

வியாழன், 25 நவம்பர் 2021 (20:49 IST)
உலகம் முழுவதும் சூப்பர்ஹிட் அடித்துள்ள Squid game என்ற  வெப் தொடரை வடகொரியாவில் பரப்பியதற்காக ஒருவருக்கு அந்நாட்டின் அதிபர்  கிம் மரண தண்டனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நெட்ப்ளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்த வெப் சிரிஸ் ஸ்குவிட் கேம். இந்தத் தொடர் இணையதளத்தில் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்ட  வெப் தொடர் என்ற சாதனை படைத்துள்ளது.

இந்த தொடரில் வரும் கதாப்பாத்திரம் மற்றும் அவர்களது உடைகள் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளன. 

இந்நிலையில், உலகம் முழுவதும்  வரவேற்பை பெற்றுள்ள Squid game வெப் தொடரை வடகொரியாவில் பரப்பியதற்காக ஒருவருக்கு அந்நாட்டின் அதிபர்  கிம் மரண தண்டனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அந்நாட்டில் Squid game தொடரை காப்பி செய்த மாணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனைப்பார்த்த சுமார் 6 பேருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்