நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சமந்தா நடித்த அனைத்தும் பயங்கர ஹிட். திருமணத்துக்கு பிறகு நடிகைகளுக்கு வரவேற்பு இருக்காது என்ற மாயயை உடைத்து எறிந்து விட்டார். அவர் கைவசம் பல படங்கள் உள்ளன. சமந்தா நடிப்பில் U-டர்ன் படம் செப்டம்பர் 13ம் தேதி திரைக்கு வருகிறது. அதுவும் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.