அவ எக்ஸ் பாய் பிரண்டோடு நைட் பார்ட்டில.... தர்ஷன் சொன்ன ஷாக்கிங் தகவல்!

சனி, 1 பிப்ரவரி 2020 (12:11 IST)
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானவர்களில் முக்கியமானவர் தர்ஷன். இலங்கையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இவர் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே தனக்கு ஒரு காதலி இருப்பதாக தர்ஷன் கூறியிருந்தார்.  சனம் ஷெட்டியும் தர்ஷன் குறித்து நிறைய பேட்டிகளில் பேசியிருக்கிறார். 
 
இந்நிலையில் நேற்று தர்ஷன்  தன்னை நிச்சயம் செய்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்  சனம் ஷெட்டி. இந்நிலையில் இது குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ள தர்ஷன்..... " ஆம் எங்கள் இருவரும் நிச்சயம் நடந்தது உண்மை தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்ததும் திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்திருந்தேன். ஆனால், நான் பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போது பிகினி உடையணிந்து போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார். அதை தட்டி கேட்டேன். பின்னர் நான் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்ததும் எங்கேயும் தனியாக செல்ல கூடாது...மற்ற பெண் போட்டியாளர்களுடன் பேசக்கூடாது என என்னை டார்ச்சர் செய்தால். 
 
அதுமட்டுமின்றி எனக்கும் உனக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்னை திருமணம் செய்துகொள் இல்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டினால்... நிச்சயம் ஆனதை மீடியாவிடம் சொல்ல சொல்லி டார்ச்சர் செய்தால். மேலும்,  என்னை வைத்து படம் எடுப்பதாக இருந்த மூன்று தயாரிப்பாளரிடம் சென்று என்னை பற்றி தவறாக கூறி என்னுடைய வாழ்க்கையை அழிக்க பார்த்தால். என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஷெரீனை அன்பாலோ செய்தார். நான் சனம் ஷெட்டியை காதலிப்பதை ஷெரினிடம் சொல்லி நண்பர்களாக தான் இருந்தோம். அதற்குள் இவ்வளவு சந்தேகப்பட்டு டார்ச்சர் செய்தாள்.
 
சத்யா மற்றும் ரம்யா திருமண நிகழ்ச்சிக்கு அவள் சென்ற போது அங்கே அவளுடைய முன்னாள் காதலன் வந்திருக்கிறான். அவருடன் சேர்ந்து இரவு பார்ட்டியில் தனியாக இருந்திருக்கிறார்கள். இதை அவர்களே என்னிடம் கூறினார்கள். இதேபோல எனக்கு இதுவரை  15 லட்சம் வரை பண உதவி செய்துள்ளதாக நேற்று கூறியிருக்கிறாள்.என்னுடைய Tax பிரச்சனைக்காக ஒரு 3.5 லட்சத்தை வாங்கியிருந்தேன்.  அந்த பணத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்ததும் கொடுத்துவிட்டேன். நிச்சயதார்த்தத்திற்கு  2.5 லட்சம் செலவு செய்தாள் அதை மட்டும் இன்னும் கொடுக்கவில்லை... இது எல்லாவற்றிற்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்றார் தர்ஷன். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்