விரைவில் தொடங்குகிறது ‘தமிழ்படம்’ இரண்டாம் பாகம்

வியாழன், 7 டிசம்பர் 2017 (15:48 IST)
‘தமிழ்படம்’ இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது.

 
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் ‘மிர்ச்சி’ சிவா நடித்த படம் ‘தமிழ்படம்’. இந்தப் படத்தில் திஷா பாண்டே ஹீரோயினாக நடித்தார். எம்.எஸ்.பாஸ்கர், ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, மனோபாலா, டெல்லி கணேஷ், பரவை முனியம்மா ஆகியோர் நடித்திருந்தனர்.
 
எல்லா நடிகர்களையும் கிண்டல் செய்து காமெடியாக எடுக்கப்பட்ட இந்தப் படம், சூப்பர் ஹிட்டானது. அதன்பிறகு ‘இரண்டாவது படம்’ என்ற படத்தை இயக்கினார் சி.எஸ்.அமுதன். ஆனால், அந்தப் படம் ரிலீஸாகவே இல்லை.
 
இந்நிலையில், தமிழ்படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடங்குகிறார். ‘மிர்ச்சி’ சிவா ஹீரோவாக நடிக்க, ஐஸ்வர்யா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார். ‘விக்ரம் வேதா’ படத்தைத் தயாரித்த சஷிகாந்த் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்