துப்பறிவாளன் பார்ட் 2 தயார்; விஷால்

சனி, 16 செப்டம்பர் 2017 (20:28 IST)
மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தயார் என விஷால் தெரிவித்துள்ளார்.


மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் துப்பறிவாளன். மிஷ்கின் படம் என்றாலே எல்லோரிடமும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் இந்த படத்திற்கு அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் மலேசியாவில் செய்தியாளர்களை சந்தித்த விஷால் கூறியதாவது:-

துப்பறிவாளன் படம் வெற்றி அடைந்துவிட்டது. இதை நாங்கள் எதிர்பார்த்தோம். இது ஒரு பெரிய உழைப்பு. இந்த படத்தின் தொடர்ச்சியாக அடுத்த பாகத்தை உருவாக்குவது நிச்சயம். இதை ஏற்கெனவே திட்டமிட்டிருந்தோம், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்