சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்!

சனி, 7 மே 2022 (14:07 IST)
இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடியின் அடுத்த படமாக உருவாகி வருகிறது மைக்கேல் திரைப்படம்.

இயக்குனர் ராமின் உதவியாளரான ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய் சேதுபதி புரியாத புதிர் என்ற படத்தில் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. அதையடுத்து ரஞ்சித் ஜெயக்கொடி இதய் ராணியும் இஸ்பேட் ராஜாவும் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் ஓரளவு கவனம் பெற்றதால் இப்போது மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் சந்தீப் கிஷன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளார்.

தற்போதைய டர்ண்ட்டான பேன் இந்தியா திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாக உள்ளது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.  சந்தீப் கிஷன் சிக்ஸ் பேக் உடலோடு இருக்கும் மிரட்டலான போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்