விஜய் பேசியபோது ‘தெறிக்க’விட்ட தல ரசிகர்கள்

திங்கள், 16 மார்ச் 2020 (06:27 IST)
விஜய் பேசியபோது ‘தெறிக்க’விட்ட தல ரசிகர்கள்
எந்த ஒரு விழாவில் தல அஜித் குறித்து யார் பேசினாலும் கைதட்டலும் கரகோஷமும் விண்ணை பிளக்கும் என்பது தெரிந்ததே. அதற்கு விஜய் பட விழாவும் விதிவிலக்கல்ல என்பது நேற்று நிரூபணம் ஆனது.
 
நேற்று நடைபெற்ற ‘மாஸ்டர்’ ஆடியோ விழாவில் விஜய் பேசியபோது, அவர் இந்த விழாவுக்கு கோட், சூட் அணிந்து வந்தது குறித்து பேசினார். அவர் பேசியதாவது:
 
ஒவ்வொரு ஆடியோ விழாவிற்கும் நான் சுமாராக டிரஸ் செய்து கொண்டு போவதாக கூறிய என்னுடைய காஸ்டியூம் டிசைனர் பல்லவி, இந்த விழாவுக்கு கோட், சூட்டை ஏற்பாடு செய்தார். சரி நம்ம நண்பர் தல அஜித் மாதிரி நாமும் கோட், சூட் போடுவோமே என்று இந்த விழாவுக்கு நான் கோட், சூட் அணிந்து வந்தேன்’ என்று விஜய் கூறினார். 
 
அவர் தல’ என்று கூறிய அடுத்த நொடி, அரங்கத்தில் கரகோஷம் விண்ணை பிளந்தது. அந்த கரகோஷமும் கைதட்டல் ஒலியும் அடங்க ஒருசில நிமிடங்கள் ஆகியது. தொகுப்பாளினி பாவனா அடுத்த கேள்வியை கேட்க விடாமல் கரகோஷம் நீண்டுகொண்டே இருந்ததால் அவரே அதிர்ந்து போனார்.
 
விஜய் பட விழாவில் தல அஜித் பெயரை சொன்னதும் கிடைத்த வரவேற்பை பார்த்ததும் அனைவரும் இன்ப அதிர்ச்சி ஆனார்கள். ஆனாலும் தல அஜித்தை தனது நண்பர் என்று விஜய் கூறியது குறித்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்