கோட் படத்தின் சாட்டிலைட் உரிமையும் லாக்… கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி!

vinoth

திங்கள், 1 ஏப்ரல் 2024 (07:20 IST)
விஜய் தன்னுடைய அரசியல் வருகையை அறிவித்து விட்ட நிலையில் அவர் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக கேரளா மற்றும் ரஷ்யாவுக்கு படக்குழு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏப்ரல் மாத இறுதிக்குள் மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே பெரும் தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து தற்போது படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸும் கையெழுத்தாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தை சன் டிவி நிறுவனம் 50 கோடி ரூபாய் தொகைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்