கோட் படத்தில் தோனியா… யாருப்பா கிளப்பிவிட்டது?- வெளியான உண்மை தகவல்!

vinoth

சனி, 30 மார்ச் 2024 (08:07 IST)
விஜய் தன்னுடைய அரசியல் வருகையை அறிவித்து விட்ட நிலையில் அவர் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக கேரளா மற்றும் ரஷ்யாவுக்கு படக்குழு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏப்ரல் மாத இறுதிக்குள் மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் கிரிக்கெட் வீரர் தோனி நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் படக்குழு வட்டாரத்தில் இந்த தகவல் உண்மையில்லை என விளக்கமளித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இப்போது தோனி ஐபிஎல் போட்டிகளில் பிஸியாக இருந்துவரும் நிலையில் எப்படி ஒரு படத்தில் நடிக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்