காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நாளை காலை 9 மணி முதல் 1 மணி வரை கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற இருக்கிறது.
இது குறித்து திருப்பதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியில் அளித்த நடிகர் சுமன், ஆந்திராவில் சிறப்பு அந்தஸ்து கோரி டெல்லியில் போராட்டம் நடத்த போவதாகவும், விரைவில் போராட்டம் தேதி அறிவிக்கப்படும் என்றார்.