கேமராவை இப்படி முகத்துக்கு நேராக நீட்டினா?... பத்திரிக்கையாளர்கள் மேல் கோபத்தைக் கொட்டிய டாப்ஸி!

திங்கள், 19 டிசம்பர் 2022 (10:11 IST)
பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகை டாப்ஸி “ஆடுகளம்” மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னர் பல மொழி படங்களில் நடித்து வந்த அவர் தற்போது இந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். பல தரமான படங்களைக் கொடுத்து வரும் டாப்ஸி சமீபத்தில் நடித்த சபாஷ் மிது திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து அவர் இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார்.

இப்போது இவர் நடித்துள்ள ப்ளர் என்ற திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் திரும்பி செல்கையில் அவரின் கார் கதவை திறக்கவிடாமல், அவரை மறித்து செய்தியாளர்கள் கேமரவோடு அவர் முன்னால் கேமராவை நீட்டி சூழ்ந்துகொண்டு கேள்விகளை கேட்டனர்.

இதனால் கோபமான டாப்ஸி “ உங்களுக்கு இப்படி நடந்தால் என்ன செய்வீர்கள். ஏன் எனது தனிப்பட்ட வாழ்க்கைக்குள் வருகிறீர்கள். நான் எரிச்சல் அடையவேண்டும் என்றே இதை செய்கிறீர்களா?.  நான் பிரபலம் என்பதால் என்னை மூச்சு விடக் கூட முடியாத அளவுக்கு இப்படி செய்துவிட்டு என்னை திமிர்த்தனம் பிடித்தவள் என சொல்கிறீர்கள். என்னை நீங்கள் அப்படி சொன்னாலும் எனக்குப் பிரச்சனை இல்லை” எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்