இந்த ஆண்டு தென்னிந்திய சினிமாக்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் நிலையில் பாலிவுட் சினிமாவோ பலத்த அடி வாங்கி வருகிறது. சல்மான் கான், அமீர்கான் மற்றும் ஷாருக் கான் ஆகியோரின் படங்கள் படுதோல்வி அடைந்துள்ளன.
முன்னணி இயக்குனர்களின் படங்களும் பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பாலிவுட் முன்னணி இயக்குனர் அனுராக் காஷ்யப் “புஷ்பா, கேஜிஎப் மற்றும் காந்தாரா போல நாமும் பெரிய பட்ஜெட்டில் படங்களை உருவாக்கினால் அது அழிவுக்குதான் வழிவகுக்கும்.” எனக் கூறியுள்ளார்.