படப்பிடிப்பில் விபத்து… தமிழ் ஸ்டண்ட் நடிகர் மரணம்!

புதன், 11 ஆகஸ்ட் 2021 (17:19 IST)
கன்னட திரைப்பட படப்பிடிப்பின் போது ஏற்பட்ட மின் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்டண்ட் நடிகர் விவேக் உயிரிழந்துள்ளார்.

கர்நாடகாவின் பெத்தாடியில் கன்னட திரைப்படமான 'ஐ லவ் யூ ரச்சு' படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்ட நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் காட்சிகளை படமாக்கியுள்ளார். அப்போது ஸ்டண்ட்டில் பங்குபெற்ற நடிகர்களில் ஒருவரான விவேக் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மற்றொரு ஸ்டண்ட் வீரர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது சம்மந்தமாக போலிஸார் படக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்