விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடி இவரா? 9 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கூட்டணி!

திங்கள், 31 ஜூலை 2023 (08:58 IST)
அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் இப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் இன்னும் அடுத்த கட்ட பணிகள் நடக்கவில்லை. ஷூட்டிங் எப்போது என்பதும் தெரியவில்லை.

இந்நிலையில் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள அஜித் தற்போது சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் இப்போது விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட பணிகளை இயக்குனர் மகிழ் திருமேனி தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கன நட்சத்திர தேர்வு பட்டியலை அவர் முடித்து லைகா தரப்பின் முடிவுக்காக அனுப்பியுள்ளாராம்.

இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிப்பார் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தமன்னாவிடம் இப்போது பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. தமன்னா இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு வீரம் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்