’தல ‘அஜித்-ன் ’’வலிமை’’ பட அப்டேட் வந்தாச்சு… ரசிகர்கள் மகிழ்ச்சி !

வியாழன், 1 அக்டோபர் 2020 (19:15 IST)
அஜித்தின் வலிமை படத்தின் இயக்குனர் ஹெச் வினோத் துப்பாக்கியோடு நிற்கும் புகைப்படம் ஏற்கனவே ஒன்று வைரலாகியுள்ளது. இந்நிலையில் வலிமை படத்தின் முக்கிய ஆக்‌ஷன் காட்சிகள் புதிய ஸ்டைலில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டுள்ளது. இந்த படத்துக்காக நல்ல கட்டுமஸ்தான உடல் தோற்றத்தில் தோன்ற வேண்டும் என்று அதன் இயக்குனர் ஹெச் வினோத் முன்பே அஜித்திடம் தெரிவித்திருந்தார். அதனால் இப்போது இந்த லாக்டவுனை பயன்படுத்தி அஜித் தனது உடல்வாகை நன்கு ஏற்றி வருகிறார்.

இந்நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புக்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது படக்குழு. இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தி இதுவரை இல்லாத விதத்தில் புதிய ஸ்டைலில் சண்டைக்காட்சிகள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இதுவரை  60% படக்காட்சிகள் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்