ரொம்ப நாஸ்டாஜியாவாக இருக்கிறது. எனக்கு ஊர் கோயம்புத்தூர் தான், ஜர்னலிசம் படிச்சேன், பிரகாஷ் ராஜ் கண்ணில் பட்டு, இனிது இனிது படம் செய்தேன். காலேஜ் படிக்கும் போதே ஹீரோ ஆகிவிட்டேன். சமீபத்தில் மிஷ்கின் சார் இசையமைத்த டெவில் படத்தில் நடித்தது மகிழ்ச்சி. நான் தெலுங்கில் பல படங்கள் செய்திருந்தாலும் இங்கு பார்ப்பவர்கள் என்ன படம் செய்துள்ளாய் எனக் கேட்கும் போது, வருத்தமாக இருக்கும், அதனால் தமிழில் படம் செய்ய வேண்டும் என நினைத்தேன். அந்த நேரத்தில் தான் ராஜசேகர் சார் கதை சொன்னார். அவர் தயங்கி தயங்கி கதை சொன்னார், இப்போதைய கால கட்டத்தில் ஒன்று அழ வைக்க வேண்டும், இல்லை சிரிக்க வைக்க வேண்டும், இப்போது நான் சீரியஸ் படங்கள் தான் செய்து வருகிறேன், அதனால் கண்டிப்பாக இந்தப்படம் செய்யலாம் என சொன்னேன். இப்படத்திற்காக ஈசிஆரில் பாடல் ஷீட் செய்தோம் அதே இடத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்துள்ளேன், இப்போது ஹீரோவாக நடித்தது மகிழ்ச்சி. இப்படத்தில் விஜய் ஶ்ரீ மேடம் செம்ம சூப்பராக வேலை பார்த்துள்ளார், அவருக்கு நன்றி. ராஜசேகர் சார் மிக கடினமான உழைப்பாளி, இப்படம் கண்டிப்பாகப் பேசப்படும் படமாக இருக்கும். எங்கள் படத்தில் மூன்று கதாநாயகிகள், அனுபவம் வாய்ந்தவர்கள் என்னுடன் இணைந்து நடித்ததற்கு நன்றி. இந்தப்படம் எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் ஜாலியான படமாக இருக்கும் நன்றி என்றார்.