இந்த வழக்கு சிபிஐ கைக்கு மாற்றப்பட்டதையடுத்து நாளுக்கு நாள் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது சுஷாந்த் போதை மருந்துக்கு அடிமைக்கப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதாவது இவரது முன்னாள் காதலில் ரியா, சுஷாந்திற்கு தேநீரில் சில துளிகள் போதை மருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ரியா தரப்பு இதை முற்றிலுமாக மறுத்துள்ளது. ரியா ஒரு நாளும் போதை மருந்தை உட்கொள்வில்லை எனறும் ரத்த பரிசோதனைக்கும் அவர் தயார் என்றும் கூறப்பட்டுள்ளது.