விஜய், அஜித் மீது குற்றம் சாட்டிய சுசீந்திரன்!!

செவ்வாய், 17 அக்டோபர் 2017 (21:00 IST)
வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் சுசீந்திரன்.


 
 
தற்போது ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற படத்தை இயக்கி அதன் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். நவம்பர் 10 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகவுள்ளது.
 
இந்நிலையில் பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்காதது ஏன் என கேள்வி கேட்கப்பட்டது அதற்கு, முன்னனி ஹீரோக்கள் கால்ஷீட் தருவதில்லை. சூர்யாவிடம் ஒரு கதை சொன்னேன். அது அவருக்கு பிடிக்கவில்லை. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். 
 
விஜய்யிடம் கதை சொல்ல அப்பாயிண்மெண்ட் கேட்டேன். தருவதாக சொன்னார். ஆனால் இதுவரை கிடைக்கவில்லை. அஜித்திடமும் கதை சொல்ல அப்பாயின்மெண்ட் கேட்டு இதுவரை கிடைக்க வில்லை என சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்