சூர்யா கொடுத்த போலீஸ் புகார். கோலிவுட்டில் பரபரப்பு

வியாழன், 30 மார்ச் 2017 (21:41 IST)
சமீபத்தில் விஜய் மில்டன் இயக்கத்டில் ராஜகுமாரன், பரத் நடித்த 'கடுகு' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தமிழக உரிமையை பெற்று வெளியிட்டது.



 


இந்த நிலையில் சென்னை ஜே.ஜே. நகரில் கடுகு பட டிவிடி ஒரு குறிப்பிட்ட கடையில் விற்பதாக தெரிய வந்தது. உடனே சூர்யா அந்த கடையை நோக்கி நேரடியாக சென்றதாகவும், சூர்யாவை பார்த்த டிவிடி கடைக்காரர் தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிகிறது.

இதனையடுத்து அந்த கடை உரிமையாளர் மீது சூர்யாவின் மேனேஜர் பூபதி புகார் கொடுத்துள்ளார். கடுகு' உள்பட பல புதிய படங்களின் டிவிடி விற்பனை செய்து வரும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூர்யா தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்