சூர்யா & பாண்டிராஜ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு!

வெள்ளி, 29 ஜனவரி 2021 (16:55 IST)
சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி தொடங்க உள்ளது.

சூர்யா நடிக்கவிருக்கும் 40வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தில் நாயகியாக டாக்டர் படத்தின் நாயகி பிரியங்கா மோஹன் நடிக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த படத்துக்கு இமான் முதல்முறையாக இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பை பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி தொடங்கும் பாண்டிராஜ் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க உள்ளாராம். இந்த படம் சுதந்திர தினம் அல்லது ஆயுத பூஜை ஆகிய நாட்களில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்