பிரபல இயக்குநருடன் இணையும் சூர்யா..ரசிகர்கள் மகிழ்ச்சி

சனி, 30 ஏப்ரல் 2022 (20:36 IST)
நடிகர் சூர்யா இயக்குநர் ரவிக்குமார் இயக்கும்   படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகர் சூர்யா. இவர்  நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்கள் ஹாட்ரிக் வெற்றி பெற்றது. தற்போது, இவர் தயாரிப்பில் சூரரைப் போற்று படம் இந்தியில் அஜய்தேவ்கான் நடிப்பில் ரீமேக் ஆகிறது. பாலா இயக்கி வரும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மீனவர் பிரச்சனையை  அடிப்படையாகக் கொண்டதாக தகவல் வெளியானது.

இப்படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் என்ற படத்தில்  நடிக்கவுள்ளார்.

இந்த படங்களை முடித்த பின்,  நேற்று இன்று நாளை, அலயான் ஆகிய படங்களை இயக்கிய ரவிக்குமாரின் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும், இப்படம் 2024 ஆம் ஆண்டு தொடங்கவுள்ளதாகவும், இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்